• +91 9443417433
  • ircds1986@gmail.com
Cyber Safety Materials
Cyber Security Guide for customers - State Bank of India
இணையம் தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சியால் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும் சில பாதிப்புகள் இருக்கவே செய்கின்றன. உலக மக்கள்தொகையில் 60% பேர் இணையவழி அச்சுறுதலுக்கு ஆளாவதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது. கொரோனா பொதுமுடக்க காலத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் கல்வி இணைய வழியில் மட்டுமே சாத்தியம் என்றான பிறகு பிள்ளைகள் 24 மணி நேரமும் திறன்பேசியும் கையுமாகவே உள்ளனர். விழிப்புணர்வின்றி சமூக ஊடகங்களில் முன்பின் தெரியாதவர்களுடன் நட்பாவதும் அவர்களுடன் தம் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வதும், அதனால் பலவித பாதிப்புக்குள்ளாவதும் மிகவும் அதிகரித்துள்ளது.
இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? இணையவழி மிரட்டல்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பது போன்ற அதிமுக்கியமான தகவல்களை உளவியலாளர், எழுத்தாளர் அருட்தந்தை சூ. மா. ஜெயசீலன் அவர்கள் நம்மோடு கலந்துரையாடிய காணொளி இது .